RSS

இந்திய மொழிகளில் Transliteration தட்டச்சு செய்ய








இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யுங்கள் (Press Ctrl+g to toggle between English and selected language)


உரையை உள்ளிட்ட பின் ஒரு space விட உங்கள் உள்ளீடு transliterate ஆகும்..

இங்கே மொழியை தேர்வு செய்யவும்:

தலைப்பு :

சோதனை பெட்டி :

கூகிள் இந்தியாவிற்கு நன்றி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழில் அழகாக இணையத்தில் தட்டச்சு செய்வது எப்படி?


இணையத்தில் தமிழில் வேகமாக தட்டச்சு செய்ய பலர் விரும்புவது உண்டு.. இது ஒன்றும் கடினமான காரியம் அல்ல..


தற்போது பரவலாக இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்ய உதவும் ஓர் முறை உச்சரிப்பு வழி தமிழ் தட்டச்சு முறையாகும்..

இந்த முறையை பயன்படுத்த ஆங்கீலத்தில் தங்கிலீஸில் அடித்து பழக வேண்டும்..உதாரணத்திற்கு அம்மா என்பதை ammA என்று தட்டச்சு செய்ய வேண்டும்..

இதனை ஆங்கிலத்தில் transliteration by phonetics என்று அழைப்பர்..இந்த முறையை பயன்படுத்த உங்களிடம் தமிழ் நெட் அல்லது எ-கலப்பை மென்பொருள் வேண்டும்..

எ-கலப்பை மென்பொருள் இலவச மென்பொருள்..இதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



தரவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்க..

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கி எ-கலப்பை விக்கிபீடியா காண்க..


வாழ்க தமிழ்..வளர்க தமிழ் இணையம்..
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருட்டை ஒழிப்போம்.மொழியை காப்போம்..

  திருட்டு என்பது திருடர்களின் திருட்டு மட்டும் அல்ல..அடுத்தவனின் மூளையை திருடுவதும் திருட்டே..திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..



   இப்போது நான் இங்கு குறிப்பிடும் குற்றங்கள் அனைத்துமே சிறியவை என்றாலும் அதன் விளைவினால் ஏற்படும் நட்டங்கள் மிக பெரியவை..

   தமிழ் மொழியில் தற்சமயம் பெருவாரியான திருட்டு "காப்புரிமை பெற்ற பொருட்களை திருடுவது.."

  இந்த திருட்டு மூன்று வகைப்படும்..

1.காப்புரிமை பெற்ற அச்சுகளை பிரதியாக்கி திருடுதல்
2.புதிய திரைப்படங்களை குறுந்தகடுகள் மூலமாக வினியோகம் செய்தல்
3.மென்பொருட்களை அனுமதி இன்றி திருடுதல்

  இந்த திருட்டுகள் செய்யும் குற்றவாளிகள் உங்கள் கண்முன்னே இருந்தால் தைரியமாக தட்டி கேளுங்கள்..நமது கோழைத்தனமே இந்த திருட்டுகள் இந்த அளவு வளர காரணம்..

சிந்தனை: "தன் உழைப்பில் உண்ணும் ஊதியமே செரிக்கும்"

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழை தமிழில் எழுதுவோம்..தமிழ் மொழி காப்போம்..

அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்..



என் பெயர் எ.அருள் பெஞ்சமின் சந்துரு..நான் முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்..இது எனது புதிய முயற்சி..



"தமிழை தமிழாக பேசுங்கள்..தமிழாக எழுதுங்கள்..தங்கிலீஷ் வேண்டாம்..தமிழில் ஆங்கிலத்தை எழுதலாம் ஆனால் ஆங்கிலத்தில் தமிழ் வேண்டாமே.."

இதுவும் ஓர் தமிழ் வளர்க்கும் தளம்..உங்கள் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..எனது இந்த முயற்சியின் தூண்டுகோல் முனைவர்.மு.இளங்கோவன் ஐயா..அவரது வலைபூவிற்கு செல்லும் அனைவருக்கும் தமிழ் ஆர்வம் கண்டிப்பாக வளரும்..


அவரது வலைபூவிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

இனிய தமிழில் இணையம் வளர்ப்போம்..இன்று முதல் அதற்கு உறுதி எடுப்போம்..


இப்படிக்கு,
உங்கள் அன்பு நண்பன்,
எ.அருள் பெஞ்சமின் சந்துரு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS